FEATUREDLatestNewsTOP STORIES

வாகன இறக்குமதி தொடர்பில் சாதகமான பதில்!!

வாகன இறக்குமதி தடை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதுடன்

மூலோபாய திட்டத்தின்படி விலக்கு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்கமாக,

மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க, நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகள் தொடர்பில் வாரந்தோறும் மீளாய்வு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,

மோட்டார் வாகனங்கள் தவிர்ந்த அனைத்து பொருட்களையும் செப்டம்பர் முதல் வாரத்தில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

286 பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கப்பட்டுள்ளதுடன்,

வாகனங்கள் உட்பட 930 பொருட்களின் இறக்குமதிக்கான தற்காலிக தடை நீடிக்கிறது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 500 பொருட்கள் தடை செய்யப்பட்ட இறக்குமதிப் பிரிவில் இருந்தன, அவற்றில்,

250 இறக்குமதித் தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமைய,

இரண்டு கட்டங்களாக இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பொருட்களை எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரத்திற்குள் நீக்குவதற்கு இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *