புதிதாக விருத்தியடைந்த ஒமிக்ரோன் வைரஸின் புகைப்படம் வெளியிட்ட இத்தாலி விஞ்ஞானிகள்!!
புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள ஒமிக்ரோன் கொரோனா வைரஸின் புகைப்படத்தை உலகில் முதன்முதலாக இத்தாலி விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
ரோமில் உள்ள Bambino Gesù குழந்தைகள் மருத்துவமனையின் விஞ்ஞானிகள் உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸின் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
வைரஸின் உருவத்தில் ஒட்டியிருக்கும் மனிதர்களின் செல்களுக்குள் நுழைய தேவைப்படும் புரதத்தில், டெல்டா வகை வைரஸை விட ஒமிக்ரோன் வைரஸில் அதிக பிறழ்வுகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இருப்பினும் இவை டெல்டா வகை வைரஸை விட அதிக ஆபத்தானவை என கருத முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.