FEATUREDLatestNewsTOP STORIES

முகமாலையில் பாரிய விபத்து….. 46 இற்கும் அதிகமானோர் படுகாயம்!!

கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து,

கனரக வாகனம் மற்றும் வான் ரக வாகனங்களுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று (15/10/2022) மதியம் முகமாலையில் இடம்பெற்றுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தானது

 

கனரக வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது
குறித்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 47 இற்கும் மேற்பட்டோர் காயப்பட்டதாகவும் 15 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,

மேலும்,

10 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் பேருந்து, கனரக வாகனம் மற்றும் வான் என்பன சேதமடைந்துள்ளன.

 

2 thoughts on “முகமாலையில் பாரிய விபத்து….. 46 இற்கும் அதிகமானோர் படுகாயம்!!

  • Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *