FEATUREDLatestNewsWorld

மக்களின் கூடாரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: குற்றம் சாட்டியுள்ள மனித உரிமை அமைப்பு

மனிதாபிமான வலயமாக அறிவிக்கப்பட்ட அல்-மவாசி (Al-Mawazi), கான் யூனிஸ் (Khan Yunis) மற்றும் ரஃபாவில் (Rafah) உள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்கள் மீது இஸ்ரேலிய (Israel) இராணுவம் நடத்திய 15 தாக்குதல்களை தங்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளதாக அல் மெசான் மனித உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களில் 248க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட, 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அல்-மவாசி பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் பாழடைந்த கூடாரங்களில் அத்தியாவசிய சேவைகள் இல்லாமல் வாழ்கின்றனர்.

மேலும் ஒரே இரவில், அல்-மவாசியில் இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்களை இராணுவம் குண்டுவீசித் தாக்கியதில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் உட்பட பொதுமக்களின் உயிர்களுக்கு எந்தவிதமான மதிப்பு இல்லாமல் இடம்பெயர்ந்தவர்களின் கூடாரங்களை குறிவைப்பதில் இஸ்ரேல் பாரிய சக்தியைப் பயன்படுத்துவதாக அல் மெசான் மனித உரிமைகள் மையம் மற்றும் அல்-ஹக் பலஸ்தீனிய (Palestine) மனித உரிமைகள் மையம் ஆகியன குற்றம் சுமத்தியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *