இந்த ஆண்டு முதல் அரையாண்டு காலப்பகுதியில் மட்டும் 28 பதின்ம வயது கர்ப்பம் பதிவு!!
இலங்கையில்(Sri lanka) பதின்ம வயது கர்ப்பம் மற்றும் தகாத முறை செயற்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் மட்டும் 28 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) அண்மைய தரவுகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.
அதிகார சபையின் தரவுகளின்படி,
பதின்ம வயது கர்ப்பம் பெரும்பாலும் தகாத முறை செயற்பாட்டின் நேரடி விளைவாக குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது.
2024 இன் முதல் அரையாண்டில் 28 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2023 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 18 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது இந்த ஆண்டில் 55.5வீத அதிகரிப்பைக் குறிக்கிறது.
இதனுடன் இணைந்து,
வன்புணர்வு மற்றும் கடுமையான தகாத முறைச் செயற்பாடு பற்றிய சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.
2024 ஆம் ஆண்டில் மட்டும் 23 வன்புணர்வு சம்பவங்கள்பதிவாகியுள்ளன.
2023 இல் பதிவு செய்யப்பட்ட மொத்த 50 சம்பவங்களில் கிட்டத்தட்ட பாதி.
இந்த ஆண்டு இன்னும் அதிக எண்ணிக்கையுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
கூடுதலாக,
2024 இன் முதல் ஆறு மாதங்களில் 157 கடுமையான தகாத முறைச் சம்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுகளில் இருந்து ஒரு சிக்கலான போக்கை காட்டு வதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிகாரசபையின் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துவது போல் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. பதின்மவயது கர்ப்பம் மற்றும் தகாத முறை செயற்பாடுகள் தொடர்பான சம்பவங்களின் அதிகரிப்பு, இந்த குற்றங்களால் பாதிக்கப்படும் இலங்கை இளைஞர்கள், குறிப்பாக சிறுமிகள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளதை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.