அரச மற்றும் தனியார் துறை இணைந்து….. இலங்கையில் மின்சார பேருந்து இறக்குமதிக்கு திடடம்!!
புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஏற்படும் செலவைக் குறைக்கும் வகையில் குறித்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
அரச துறையும், தனியார் துறையும் இணைந்து குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக,
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வர்த்தக நகரங்களான கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போக்குவரத்துக்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதன் முதற்கட்டமாக பரீட்சார்த்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?