CINEMAFEATUREDindiaLatestNews

Good Bad Ugly படத்தின் இசை அப்டேட் கொடுத்த ஜி.வி பிரகாஷ்

நடிகர் அஜித் குமார் மற்றும் இக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளஇந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

திரைப்படத்தின் இசை அப்டேட்டை தற்பொழுது ஜி.வி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். அதன்படி படத்தின் பின்னணி முடிவடைந்துள்ளதாகவும். படத்தின் வெளியீட்டிற்காக ஆயத்தமாகி கொண்டு இருப்பதாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.