சமையல் எரிவாயுக் கொள்கலனுக்குள் மர்ம பொருள்!!
சாதாரண வெற்று எரிவாயுக் கொள்கலன் ஒன்று காணப்பட வேண்டிய நிறையை விடவும் 2.5 கிலோ கிராம் அதிக நிறையுடைய வெற்று எரிவாயுக் கொள்கலன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த எரிவாயு விற்பனையாளர் அதனை பரிசோதனையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்ட எரிவாயு விற்பனையாளர்,
“இந்த எரிவாயுக் கொள்கலன் 12.5 கிலோ கிராம் எரிவாயுவுடன் வருகிறது. வெற்று எரிவாயுக் கொள்கலன் 12.2 கிலோ கிராம் எடை கொண்டது. எரிவாயு கொண்ட முழுமையான கொள்கலன் 24.7 கிலோ கிராம் காணப்படும்.
எனினும்,
தற்போது கையில் உள்ள கொள்கலனை அசைத்து பார்க்கும் போது ஏதோ ஒரு பொருள் உள்ளே இருப்பது போன்று சத்தம் கேட்டுகின்றது.
இதனை அழுத்திப் பார்க்கும் போது அதில் எரிவாயு இல்லை.
ஆனால்,
மேலதிக 2.5 கிலோ கிராம் எடை காணப்பட்டது. அதனை மறுபக்கம் திருப்பி அழுத்தும் போது கறுப்பு நிறத்தில் திரவம் போன்று வெளியேறியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,
தனது வீட்டில் எரிவாயுக் கொள்கலனில் கசிவு உள்ளதென தல்பிட்டிய தழுவ நிர்மலபுர பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.