வாடகை வீட்டிற்குள் மூன்று அறைகளில் செயற்கை சூழலை உருவாக்கி….. கஞ்சா செடி வளர்த்தவர் கைது!!
நுவரெலியா பிளக்பூல் பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த 27 வயதுடைய இளைஞனை நுவரெலியா மீபிலிமான காவல்துறையினர் நேற்று (15/09/2022) மாலை கைது செய்துள்ளனர்.
பிளக்பூல் பகுதியில் அமைந்துள்ள வாடகை வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கிடைத்த
இரகசிய தகவலை அடுத்து நுவரெலியா மீபிலிமான விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே வெளிநாட்டு கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டமை கண்டறியப்பட்டது.
குறித்த கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட இடத்தில் ஐந்து மற்றும் ஏழு அடி உயரமான 70 தொடக்கம் 77 கஞ்சா செடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த கஞ்சா செடிகள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது எனவும்,
வீட்டில் மூன்று அறைகளில் வளர்த்து வந்ததாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒப்புக்கொண்டார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும்,
குறித்த சந்தேகநபர் உயர் மின்னழுத்த மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை பயன்படுத்தி
வீட்டின் மூன்று அறைகளில் செயற்கையான சூழலை உருவாக்கி இந்த அயல்நாட்டு கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா மீபிலிமான காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்,
நுவரெலியா பிளக்பூல் பகுதியில் மேலும் சில இடங்களில் கஞ்சா செடி வளர்க்கப்படுகிறதா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.