TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

இலங்கையில் மீண்டும் கொடிய நோய்….. சுகாதார மேம்பாட்டுப் பணியகமிடமிருந்து அவசர எச்சரிக்கை!!

மலேரியா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை அறியப்பட்டாலும் நாட்டில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கல்முனைப் பிரதேசங்களில் மலேரியா நோய்க்கிருமியான Anopheles stephensi அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் ஜீவனி ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார். எனவே, மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று(29/06/2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்து வெளியிட்டார்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சுற்றுலா சென்றதற்காக அதிபரால் கடுமையாக தண்டிக்கப்பட்ட பிரபல பாடசாலை மாணவர்கள்!!

கிளிநொச்சி தருமபுரத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் சுமார் 30 இற்கும் அதிகமான மாணவர்கள் அதிபரால் தண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை(25/06/2023) திருகோணமலைக்கான ஒருநாள் சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலைக்கு கடந்த திங்கட் கிழமை(26/06/2023) குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் சமூகமளித்திருக்கவில்லை. பாடசாலைக்கு சமூகமளிக்காததற்கான காரணமாக, சுகயீனமென குறிப்பிட்டு கடிதமெழுதிக் கொண்டு ஒரு பகுதி மாணவர்கள் நேற்று முன்தினம்(27/06/2023) பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர். சமூகமளிக்காத மாணவர்கள் வகுப்புக்கு வெளியில் நிறுத்தப்பட்டு அதிபரால் அடித்து தண்டிக்கப்பட்டனர். Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

விசேட தேவையுடையோருக்கும் சாரதி அனுமதிப்பத்திரம்….. போக்குவரத்து மருத்துவ நிறுவனங்களின் வைத்தியர்கள் அனுமதி!!

விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து மருத்துவ நிறுவனங்களின் வைத்தியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். வைத்தியர்களின் இந்த உடன்படிக்கையுடன், அவர்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான பரிந்துரைகள் அடங்கிய விசேட அறிக்கையொன்று இம்மாத இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம்!!

வவுனியா காத்தார் சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று(28/06/2023) புதன்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞரின் பெற்றோர் காலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியிருந்த போது இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி அனுமதி!!

வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளது. அந்த உடன்படிக்கையின் கீழ், இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர்கள் கிடைக்கும். உரிய நிதியைப் பெறுவதற்கு அமைச்சரவையின் அனுமதி தேவை. கடந்த மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட 2.9 மில்லியன் டொலர் கடன் வசதியின் பின்னர் நாடு பெற்றுள்ள மிகப் பெரிய நிதி உதவி இதுவாகும். இலங்கைக்கு 700 மில்லியன் Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIES

Whatsapp நிறுவனம் தனது பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதாக வரும் தகவலை நம்பி Pink Colour Whatsapp ஐ தொட்டீர்கள் என்றால் உங்கள் ஸ்மார்ட் போன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் இப்போது குறி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, Whatsapp செயலியை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு அண்மையில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த குறுஞ்செய்தியில் வரும் இணைப்பை (link) கிளிக் செய்தால் Whatsapp logo Pink நிறத்திற்கு மாறும் என்றும், Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

இலங்கையின் டோக் இன குரங்குகள் சீன ஏற்றுமதிக்கு….. எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப் போவதில்லை!!

இலங்கையின் டோக் இன குரங்குகளை(Toque Macaque) சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப் போவதில்லையென உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனை, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் இன்று(26/06/2023) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இந்த குரங்கு ஏற்றுமதி நடவடிக்ககைளுக்கு எதிரான மனுத் தாக்கல்கள் இன்றையதினம்(26/06/2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் வழங்கிய அறிவிப்பினை சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மீண்டும் குறையும் எரிவாயு விலை….. லிட்ரோ நிறுவனத்திடமிருந்து அறிவிப்பு!!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஜூலை மாத தொடக்கத்தில் மீண்டும் குறைக்கப்படவுள்ளது. இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஜுன் மாதம் 04 ஆம் திகதி சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1281 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நான்கு பெரிய வாகனங்கள் மோதி பாரிய விபத்து….. கவலைக்கிடமாகவுள்ளது 5 பேரின் நிலைமை!!

கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் இன்று (26/06/2023) காலை இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்து வழுக்கிச் சென்று சொகுசு பேருந்துடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. சொகுசுப் பேருந்து முன்னோக்கி நகரந்தமையினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் வான் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

“ஜப்பான்” படத்தின் புதிய Update கொடுத்த நடிகர் கார்த்தி!!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்‘, ‘நம்மவீட்டு பிள்ளை‘ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, Read More

Read More