FEATURED

FEATUREDLatestNewsTOP STORIES

50 இலிருந்து 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது குறைந்த பட்ச கட்டணம்….. வெளியானது விசேட வர்த்தமானி!!

தொடருந்துகளில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று(01/02/2024) முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என தொடருந்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவை தவிரவும், இந்தக் கட்டணத் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானியில், இக்கட்டண அதிகரிப்பானது நேற்று(01/02/2024) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்களை திருத்தம் செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலானது கடந்த 18ம் திகதி போக்குவரத்த அமைச்சர் பந்துல Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

ஐரோப்பிய ஒன்றிய விவசாய விதி – பெல்ஜிய தலைநகர் பிரசல்ஸ்சில் விவசாயிகள் பாரிய எதிர்ப்பு பேரணி….. பற்றி எரியும் நாடாளுமன்றம்!!

ஐரோப்பிய ஒன்றியத்தின் விவசாய விதிகளுக்கு எதிராக பெல்ஜிய தலைநகர் பிரசல்ஸ்சில் விவசாயிகள் பாரிய எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய மாநாடு நடைபெறும் நிலையில், பிரசல்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை முற்றுகையிட்டு முடக்கும் நோக்குடன் அவர்கள் இந்த பேரணியை நடத்திவருகின்றனர். ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டை முன்னிட்டு பிரசல்ஸ்சில் உள்ள சுரங்கப் பாதைகள் மற்றும் நகரில் உள்ள பல வீதிகள் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, ஏற்கனவே போக்குவரத்து தாமதங்கள் காணப்படும் நிலையில் விவசாயிகளின் போராட்டம் இந்த Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நாட்டில் TIN வரி அடையாள இலக்கம் பெறாதவர்களுக்கு 50000 அபராதம்….. தற்காலிகமாக நிறுத்திய அரசு!!

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெறாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை இடைநிறுத்தியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் என இலங்கை அரசு அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. உரிய வரி அடையாள எண்ணைப் பெறாதவர்களுக்கு 50000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இரகசியமாக காவல் நிலையம் வந்து….. இரு வருடங்கள் முன் தன்னை சீரழித்ததை புகார் செய்த 13 வயது சிறுமி!!

இரண்டு வருடங்களுக்கு மேலாக தனது தந்தையின் பாலியல் துன்புறுத்தல்களை பொறுத்துக்கொள்ள முடியாத 13 வயது சிறுமி தனியாக காவல் நிலையம் வந்து இது தொடர்பில் முறைப்பாடு செய்ததை அடுத்து தந்தையை கடந்த (28/01/2024) கைது செய்ததாக நொச்சியாகம காவல்துறையினர் தெரிவித்தனர். நொச்சியாகம காவல்துறை பிரிவைச் சேர்ந்த 34 வயதுடைய கொத்தனார் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி தனது தாய், தந்தை மற்றும் சகோதரருடன் வீட்டில் வசித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2021) ஆறாம் ஆண்டு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இரு நாட்களில் 28 வயது இளைஞர் திடீர் மரணம்!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த 28 வயதான கணேஷ் நிஷாந்தன் என்பவரே நேற்று(30/01/2024) உயிரிழந்துள்ளார். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 26 ஆம் திகதி குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது – 800+ தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்படையால் கொலை…. மதிமுக செயலாளர் வைகோ!!

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் ஆபத்து முதலில் இலங்கையிலிருந்தே வரும் என்பதை இந்திய மத்திய அரசு உணரவேண்டும் என தமிழக நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார். மாகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பேசியிருந்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நாள் சோக மயமான நாள், 76 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 30 ஆம் நாள் இந்தியாவே கண்ணீர் கடலில் மிதந்த நாள், தேசப் பிதா Read More

Read More
FEATUREDLatestNews

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி காலமானார்!!

இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி சற்றுமுன்(25/01/2024) காலமாகி இருக்கிறார். அவர் புற்றுநோயால் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், இலங்கையில் தற்போது அவர் காலமாகியுள்ளார். அவருக்கு வயது சுமார் 47. கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர். இலங்கையில், சிகிச்சை மேற்கொண்ட நிலையில் இன்று(25/01/2023) மாலை 5. 20 மணிக்கு மரணம் அடைந்தார். இவரது உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. பவதாரிணியின் கணவர் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

விபத்தில் சனத் நிஷாந்த உயிரிழப்பு….. கொள்கலன் சாரதி கைது!!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் கொள்கலன் ஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சாரதி விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை காவல்துறை பிரிவு தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட நால்வர் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில் இந்த Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வங்கி கணக்குகள் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!!

வங்கிக் கடனட்டைகளில் நடைபெறும் பண மோசடிகள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பொது மக்களின் உளவியல் ஆசைகள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமையினைக் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தும் மோசடியாளர்கள் மிக நூதனமாக வங்கிக் கடனட்டைகளிலிருந்து பணத்தை மோசடி செய்கின்றனர். இந்நிலையில், இவ்வாறான மோசடியாளர்களிடமிருந்து பணத்தை பாதுகாத்துக் கொள்ளவேண்டிய வழி முறைகளை மக்கள் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். பாதுகாப்பு கருதி எந்தவொரு தனிநபருடனும் உங்களது தனிப்பட்ட தகவல்களை இணையவழி ஊடாக பகிர்ந்துகொள்ள வேண்டாம். மோசடி செய்யும் நபர் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரம்….. ஒதுக்கப்பட்டது பணம்!!

அதிபர் தேர்தலை இந்த வருடத்தில் நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் பதினெட்டாம் திகதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் அதிபர் தேர்தலை ஆணைக்குழு நடத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்குத் தேவையான பணத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையம் விடுத்த கோரிக்கையின்படி, பட்ஜெட்டில் இருந்து பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். அதிபர் தேர்தலை நடத்துவதற்கு பத்து பில்லியன் ரூபா செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.   Read More

Read More