FEATURED

FEATUREDLatestNews

சட்டவிரோதமாக டீசல் விற்பனை : ஒருவர் கைது

அனுராதபுரம் (Anuradhapura)- கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் டீசல் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபரை 1,225 லீற்றர் டீசலுடன் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அனுராதபுரம் விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையின் தம்புள்ளை முகாமை சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று கலென்பிந்துனுவெவ, மொரகொட மீகஸ்வெவ, நாமல்புர பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது இதன்போது, Read More

Read More
FEATUREDLatestNews

கட்டுநாயக்கவில் ஆள்மாறாட்டம் செய்து சிக்கிய ஈரானிய பிரஜை!

இத்தாலிய பிரஜை போல் ஆள்மாறாட்டம் செய்து  இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற ஈரான் (Iran) பிரஜை ஒருவரை  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள (Department of Immigration and Emigration) அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். இத்தாலிய கடவுச்சீட்டின் விவரங்களைப் பயன்படுத்தி ‘ஒன் அரைவல் விசாவிற்கு விண்ணப்பிக்க முயன்ற 40 வயதான ஈரானியப் பிரஜையை BIA வருகை முனையத்தில் குடியேற்றத் துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் நேற்றையதினம் ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் G Read More

Read More
FEATUREDLatestNews

இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (17.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த Read More

Read More
FEATUREDLatestNews

முடிவிலியாக தொடரும் புலமைப்பரிசில் சர்ச்சை: பரீட்சை திணைக்களம் வெளியிட்ட தகவல்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாக்கள் கசிந்தமையால் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக மீண்டும் பரீட்சையை நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய 03 கேள்விகளுக்கு இலவச மதிப்பெண்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜயசுந்தர மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இலவச மதிப்பெண் என்பது குறித்த கேள்விகளுக்கு பதில் எழுதிய மற்றும் எழுதாத அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். Read More

Read More
FEATUREDLatestNews

நாடாளுமன்ற தேர்தல் : இன்று வழங்கப்படவுள்ள விருப்பு எண்கள்

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் வழங்குவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அந்தந்த மாவட்ட செயலகங்களில் இன்று (16) விருப்பு எண்களை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களினதும் விருப்பப் பட்டியல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாகவும், விருப்பப்பட்டியல்களை ஆராய்ந்து மாவட்ட செயலகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு Read More

Read More
FEATUREDLatestNews

யாழில் காவல்துறை உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு : ஒருவர் கைது

யாழில் (Jaffna) காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் உள்ள காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் வீட்டிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட குறித்த நபர்  நேற்றையதினம் (15) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த வாரம் காவல்துறை உத்தியோகத்தரின் வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்து ஆறரை பவுண் நகை மற்றும் 29 ஆயிரம் ரூபா பணம் என்பவை திருடப்பட்டுள்ளன. இதையடுத்து, திருட்டு Read More

Read More
FEATUREDLatestNews

இணையவழிமோசடி : மீண்டும் சிக்கிய வெளிநாட்டவர்கள்

இலங்கையில்(sri lanka) இணையவழி மோசடியில் தொடர்புபட்டுள்ளனரென தெரிவித்து அண்மைய சில நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட சீன(china) பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து கைபேசிகள்,மடிக்கணனிகள், மற்றும் ரவுட்டர்கள் என பல இலத்திரனியல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில் சிலாபத்தில் ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் இவர்கள் நேற்று (15) கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 4 மலேசிய ஆண்கள், 3 Read More

Read More
FEATUREDLatestNews

அனைத்து முன்னாள் அமைச்சர்களுக்கும் பறந்த எச்சரிக்கை கடிதங்கள்

அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு, எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காவிட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என நீதி, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் தொழிலாளர் அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்களை உடனடியாக கையளிக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு பல நினைவூட்டல்கள் வழங்கப்பட்ட போதிலும், இதுவரை 11 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மாத்திரமே அவற்றை கையளித்துள்ளதாக அமைச்சு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மீன்பிடி விசேட எரிபொருள் நிவாரணங்கள்!!

பொருளாதார நெருக்கடி காரணமாக மீன்பிடித்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களை குறைத்து அந்த துறையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விவசாய, காணி, கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சமர்ப்பித்த யோசனைக்கே நேற்று (14/10/2024) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரித்ததன் காரணமாக மீன்பிடித்துறையில் ஏற்படும் பாதகமான தாக்கத்திற்கு தீர்வு வழங்கும் Read More

Read More
FEATUREDLatestNews

இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் ஐ .நா வழங்கிய உறுதி

இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார். இதன்போது, ஆட்சி நிர்வாகம், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் முறைமை என்பன தொடர்பில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், “பல் பரிமாண அபாய சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வது மற்றும்  இலங்கை மக்கள் மீதான அவற்றின் Read More

Read More