FEATURED

FEATUREDLatestNews

யாழை சேர்ந்த காவல்துறை பிரதி பொறுப்பதிகாரி பாம்பு கடித்து பலி!

அநுராதபுரம், உடமலுவ காவல்துறையின் பிரதி பொறுப்பதிகாரியாகப் பணியாற்றி வந்த தலைமைக் காவல்துறை பரிசோதகர் நேற்று (22) பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், யாழ்ப்பாணம் – நயினாதீவி பகுதியில் வசித்து வந்த 59 வயதான அங்குல்கம கமுவகே சரத் தர்மசிறி என்ற காவல்துறை உத்தியோகத்தரே ஆவார். அநுராதபுரம் தலைமையக காவல்துறை வழங்கியுள்ள தகவல்களின்படி, தர்மசிறி ஒரு காலத்தில் அநுராதபுரம் தலைமையக காவல்துறையிலும் பணியாற்றியுள்ளதோடு, குற்றப் புலனாய்வுப் பிரிவின்” (SOCO) OIC ஆகவும் கடமையாற்றியுள்ளார். கடந்த 19 ஆம் திகதி Read More

Read More
FEATUREDLatestNews

லண்டன் விமானங்கள் ரத்து: சிறிலங்கா எயார்லைன்ஸ் விடுத்த அவசர அறிவிப்பு

தீ விபத்து ஒன்று காரணமாக பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் இன்று (21) கொழும்பில் இருந்து லண்டன் புறப்படவிருந்த இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிறிலங்கா எயார்லைன்ஸின், லண்டனுக்கு இன்று (21) மதியம் 12:50 மணிக்கு புறப்படவிருந்த UL 503 விமானம் மற்றும் 20:40 மணிக்கு புறப்படவிருந்த UL 504 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள சிறிலங்கா எயார்லைன்ஸ், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக Read More

Read More
FEATUREDLatestNews

காசாவில் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்: பலி எண்ணிக்கை 400-ஐ கடந்தது

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஜனவரி முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனாலும் போர் நிறுத்தத்தை மீறும் வகையில்  இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து காசாவில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான இஸ்ரேலிய கோரிக்கைகளை ஹமாஸ் மறுத்தது. இதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காசா பகுதிகளில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை முடிவற்றது, விரிவடையும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த Read More

Read More
FEATUREDLatestNews

நெல்லியடி பொலிஸ் நிலையத்தின் ஒழுங்கமைப்பில் Clean Sri Lanka செயற்திட்டம் நாளை நெல்லியடியில்

தூய்மையான தேசத்தை உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் Clean Sri Lanka செயற்திட்டமானது பல இடங்களில் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. சூழலின் சுத்தம் கருதி இத்திட்டத்தினை பலரும் கையாண்டு வருகின்றார்கள் அந்த வகையில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தினரால் இந்த Clean Sri Lanka திட்டமானது நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை  (16.03.2025) மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த திட்டத்தில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினர் மற்றும் நெல்லியடி வர்த்தக சங்கத்தினரும் கைகோர்த்துள்ளனர். இந்த செயற்திட்டத்தின் மூலம் நெல்லியடி Read More

Read More
CINEMAFEATUREDLatest

கூலி படத்தின் Exclusive Stills- ஐ வெளியிட்ட படக்குழு

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஸ்ருதிஹாசன் அவரது வாழ்த்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இவர் கூலி திரைப்படக்குழுவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் Read More

Read More
FEATUREDLatestNews

வரலாற்றில் முதல் முறையாக தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம்

வரலாற்றில் முதல் முறையாக நேற்றைய தினம் (14) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,000 டொலர்களை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வரிகள் மற்றும் புவிசார் அரசியல் குறித்து முதலீட்டாளர்கள் கவலைப்படுவதால், பாதுகாப்பான புகலிட சொத்துக்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதற்கிடையில், இங்கிலாந்தின் ஈவ்லின் பார்ட்னர்ஸின் (Evelyn Partners) நிர்வாக இயக்குனர் ஜேசன் ஹோலண்ட்ஸ், தங்கத்தின் விலை அதிகரிப்பை, “தேர்வுக்கான பீதி சொத்து” என்று விபரித்துள்ளார். அத்துடன், Read More

Read More
FEATUREDLatestNews

கொழும்பில் கொடூர சம்பவம் – சகோதரர்கள் இருவர் வெட்டிப் படுகொலை

கொழும்பில் (Colombo) சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கொலை சம்பவம் இன்று (15) காலை கொழும்பு, கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, மட்டக்களப்பில் (Batticaloa) நண்பர்களுக்கு இடையேயான மோதலில் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (14) மட்டக்களப்பு வெல்லாவெளி காவல்துறை பிரிவிலுள்ள சின்னவத்தை Read More

Read More
FEATUREDLatestNews

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வுகளை ஏப்ரல் முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில், மாத சம்பளம் வழங்குவதற்கான வழக்கமான திகதிக்கு முன்னதாக ஏப்ரல் 10 ஆம் திகதி அவற்றை வழங்கவும் அரசாங்கம் தயாராகி வருகிறது. குறித்த விடயத்தை நிதி அமைச்சின் உயர் அதிகாரியை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 21 ஆம் Read More

Read More
FEATUREDLatestNews

கனேடிய வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ். ஈழத்தமிழர்

கனடா (Canada) வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே கரி ஆனந்தசங்கரி ஆவார். இலங்கையில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து, தனது 13 ஆவது வயதில் புலம்பெயர்ந்து அவர் கனடா சென்றார். கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள் சேவை Read More

Read More
FEATUREDLatestNews

யாழ் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் (Teaching Hospital Jaffna) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர வைத்திய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் சேவையை பெற வந்த நோயாளிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக எமது சேய்தியாளர் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் (Teaching Hospital – Anuradhapura) பெண் மருத்துவர் ஒருவர் கத்தி முனையில் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 8:00 Read More

Read More