FEATUREDLatestNewsTOP STORIES

பிரம்மாண்டமாக அரங்கேறியது ஏழிசை மிருதங்க நர்த்தனாய நடன மாணவியின்….. பரத நடன ஆடல் அரங்கேற்றம்!!

ஏழிசை மிருதங்க நர்த்தனாய நடன மாணவியும் யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் மாணவியுமான றஜீபன் அபிநயாவின் பரத நடன ஆடல் அரங்கேற்றம் இடம்பெற்றுள்ளது.

இந்திய கலாசார மத்திய நிலையத்தில் கடந்த 20 ஆம் திகதி அரங்கு நிறை மக்களோடு விமர்சையாக இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

வாழ்நாட் பேராசிரியர் அ.சண்முகதாஸ் மற்றும் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த அரங்கேற்ற நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில்,

யாழ்ப்பாண முன்னைநாள் இந்திய துணைதூதுவர் சிறீமான் ஆ. நடராஜன் பிரதம விருந்தினராகவும்,

ஜனாதிபதி  தேசிய செயலக மேலதிக செயலாளர் இ.இளங்கோ சிறப்பு விருந்தினராகவும்,

யாழ்ப்பாணப் பல்கலைகழக தமிழ்த்துறைத் தலைவர் கி. விசாகரூபன் பேராதனைப் பல்கைக்கழக தமிழ்துறைத் தலைவர் சிறீபிரசாந்

மற்றும் முன்னாள் யாழ். புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலய அதிபரும்,     மன்னார் சென் அன்ரனீ பாடசாலையின் தற்போதைய அதிபருமான அருட்சகோதரி மேரி றொசாந்தி ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

அணிசேர் கலைஞர்களாக நட்டுவாங்கம் நுண்கலைமாணி பரத கலாவித்தகர் சிறீமதி பாலினி கண்ணதாஸ்,

பாட்டு யாழ். பல்கலைக்கழக சேர். பொன். ராமநாதன் நுண்கலைப்பீட முதுகலை விரிவுரையாளர் தவநாதன் றொபேட்,

மிருதங்கம் சட்டமாணி கண்ணதாஸன் இசைநிலவன்,

வயலின் கேதீஸ்வரன் வேலதீபன்,

புல்லாங்குழல் கமலநாதன் தேசிகன் ஆகியோர் இணைந்திருந்தனர்.

இந்திய கலாசார மத்திய நிலையத்தில் திரளான கலைஞர்கள் சூழ நடைபெற்ற முதலாவது நடன அரங்கேற்ற நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *