FEATUREDLatestNewsTOP STORIESWorld

கடந்த 4 வாரங்களில் புதிய கொவிட்-19 தொற்று எண்ணிக்கை 52% ஆக அதிகரிப்பு – WHO….. நாட்டில் ஒருவர் உயிரிழப்பு!! !!

மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகின்ற நிலையில்

இலங்கையில் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கொவிட் அறிகுறிகளுக்கு இணையான அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை,

மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இன்று நடத்தப்பட்ட PCR பரிசோதனையில்

கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தற்போது நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை எற்படுத்தியுள்ளது.

மேலும்,

இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக இந்தியாவின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய ரீதியில் கடந்த நான்கு வாரங்களில் புதிய கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *