மீண்டும் முழுநேரப் பயணத்தடை! இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!!
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 2 பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 தடுப்புச் செயலணியின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி மே 21 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம், மே மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மே 25 செவ்வாய்கிழமை இரவு 11 மணி முதல், மே 28 வௌ்ளி அதிகாலை 4 மணி வரை மற்றுமொரு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பயணத் தடைகள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆயினும் பயணத் தடை விதிக்கப்படும் காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விநியோகத்திற்கு எவ்வித தடையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.