கோதுமை மாவின் விலைகுறைப்பால்….. பாணின் விலைகுறைப்பு தொடர்பில் அதிரடி அறிவிப்பு!!
கோதுமை மா கிலோ ஒன்றின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
” கோதுமைமாவின் விலை 270 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதே பாணின் விலையை நாங்கள் அதிகரித்தோம்.
கோதுமைமாவின் விலை 400 ரூபாவாக உயர்த்தப்பட்ட போதிலும் பாண் இறாத்தல் ஒன்றின் விலை அதிகரிக்கப்படவில்லை.
400 ரூபா என்ற ஒரு கிலோ கிராம் கோதுமைமாவின் விலையை தற்பொழுது
100 ரூபாவால் குறைப்பதால் பாணின் விலையை குறைக்க முடியாது “, எனக் குறிப்பிட்டார்.
Your article helped me a lot, is there any more related content? Thanks!