EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

4 மணி நேரத்­தில்195 நாடுகளின் தேசிய கீதங்களை அந்தந்த நாட்டு மொழிகளிலேயே பாடி உலகசாதனை படைத்­த தமிழ் சிறுமி!!

இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, 4 மணி நேரத்­தில் 195 நாடு­க­ளின் தேசிய கீதங்­களை பாடி உலக சாதனை படைத்­துள்­ளார்.

திரு­வொற்­றி­யூர் அண்­ணா­மலை நகர் பகு­தியைச் சேர்ந்­த­வர்­கள் ஹேமந்த்மோக­னப்­பி­ரியா தம்­ப­தி­யரின் மூத்த மகளான சுபிக்‌ஷா என்பவரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

 

13 வயது சிறுமி,

திரு­வொற்­றி­யூர் அரசு நூல­கத்­தில் நேற்று முன்தினம்(11/09/2022) காலை நடந்த நிகழ்வில்

4 மணி நேரத்­தில் 195 நாடு­க­ளின் தேசிய கீதங்­களை இடை விடாது பாடி­ அசத்தி உலகச் சாதனை புரிந்தார்

எட்டாம் வகுப்பில் படித்து வரும் சுபிக்‌ஷாவுக்கு சிறு பிரா­யம் முதலே அனைத்து நாடு­களின் மொழி­க­ளை­யும்

கற்­க­வேண்டும் என்ற தணியாத ஆர்­வம் இருந்து வந்­தது.

இந்நிலையில்,

பெற்­றோரின் ஒத்­து­ழைப்­பு­டன் வலையொலி (YouTube) மூலம் உலக நாடு­க­ளின் தேசிய கீதங்களைக் கேட்டு

அந்­தந்த நாட்டு ராகம் மற்றும் மொழி­களிலும் உச்சரிப்பு மாறாமல் பாடி அசத்தி உள்ளார்.

ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தியா, ரஷ்யா, உக்ரைன், ஜப்பான், ஆஸ்திரேலியா, அங்கோலா, கனடா, வங்காளதேசம், குவைத், மலேசியா, ஜிம்பாப்வே உட்பட்ட 195 நாடுகளின் தேசிய கீதங்களை அந்தந்த நாட்டு மொழிகளிலேயே பாடி அசத்தினார்.

சாதனை படைத்த சிறுமியை ஆசி­ரி­யர்­கள், மாணவர்கள் உள்­ளிட்ட பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *