FEATUREDLatestNewsTOP STORIES

பிரான்சிலிருந்து வந்த 20 வயது இளைஞனுடன் காதல்….. வீட்டைவிட்டு சென்று திருமணம் செய்த அச்சுவேலியை சேர்ந்த 15 வயது சிறுமி!!

பாடசாலை செல்லும் பதின்ம வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கூட்டிச்சென்று குடும்பம் நடத்திய 21 வயது இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி(01/10/2022) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

யாழில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 15 வயது சிறுமி மற்றும் 21 வயது இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்வியங்காடு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டு,

பிரான்ஸில் வசித்து வந்த 20 வயது இளைஞனுக்கும்,

அச்சுவேலியை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்குமிடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்த இளைஞன் தனது காதலியை திருமணம் செய்துகொண்டு தலைமறைவாகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விடயம் அச்சுவேலி காவல்துறையினரால் காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனடிப்படையில்,

காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் சிறுமியையும் குறித்த இளைஞனையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை அச்சுவேலி காவல் நிலையத்தில் பாரப்படுத்தவுள்ளதுடன்,

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *