FEATUREDLatestNewsTOP STORIES

14 வயது பள்ளி மாணவி சகோதரர், அத்தை மற்றும் பாட்டி உதவியுடன் வன்புனர்வு!!

மொனராகலை தொம்பகஹவெல பிரதேசத்தில்14 வயது பள்ளி மாணவி பாலியல் வன்புனர்வு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த குற்றச் சம்பவம் தொடர்பில் அப்பிரதேச ஆலயமொன்றின் தலைவர் உட்பட 04 பேரை தொம்பகஹவெல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜா-அல பிரதேசத்தை சேர்ந்த சிறுமி,

தொம்பகஹவெல பிரதேசத்தை சேர்ந்த தனது சித்தியின் வீட்டிற்கு பாடசாலை விடுமுறையின் போது வந்துள்ளதாகவும்,

அந்த காலப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தனது பாட்டி மற்றும் அத்தையுடன் கோவிலுக்கு சென்ற போது, ​

குறித்த இருவரின் உதவியுடன் கோவிலுக்குள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி,

தலைவரின் சகோதரர்களில் ஒருவரும் சிறுமியின் அத்தையின் வீட்டிற்குச் சென்று

சிறுமியை பாலியல் வன்புனர்வு செய்துள்ளதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தொம்பகஹவெல காவல்துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம்,

இக்குற்றச் செயலுக்கு உறுதுணையாக இருந்த தலைவர், அவரது சகோதரர் மற்றும் அத்தை, பாட்டி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மொனராகலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்திய பின்னர்

எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல காவல் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *