யாழ்.வடமராட்சி கப்பூது வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து…. ஒருவர் உயிரிழப்பு!!
இதில் 40 வயதுடைய பொன்னுத்துரை காண்டீபன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தனது தாயாரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பால வேலைக்காக குறுக்காக கட்டப்பட்ட சமிக்ஞையையும் தாண்டி பாலத்திற்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
அவசர அம்புலன்ஸ் சேவை ஊடாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.