25 உயிரிழந்த கடலாமைகள் கரையொதுங்கின!!
இன்றும் நாட்டின் சில கடற்கரைகளில் உயிரிழந்த கடலாமைகள் கரையொதுங்கின.
இதுவரையில் சுமார் 25 கடலாமைகள் கரையொதுங்கியுள்ளன.
கொழும்பு – காலி முகத்திடலில் இன்று கரையொதுங்கிய கடல் ஆமையின் உடலில் இரத்தக் கறை படிந்துள்ளது.
காலி, கொஸ்கொட, தூவேமோதர மற்றும் மஹா இந்துருவ ஆகிய கடற்கரைகளிலும் உயிரிழந்த கடல் ஆமைகள் கரையொதுங்கியுள்ளன.
இதேவேளை, கிளிநொச்சி வலைப்பாடு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆமை ஒன்று இன்று கரையொதுங்கியிருந்தது.
அந்த ஆமையின் உடலை கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் கொண்டுசென்றனர்.