ருஹுனு மகா கதிர்காம தேவாலயத்திற்குள்ளும் நுழைந்தது கொரோனா!
வரலாற்று சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம தேவாலயத்தின் ஊழியர்களில் மூன்று பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கதிர்காம சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த தேவாலயத்தின் ஊழியர்களில் பலருக்கு சளி, தொண்டை புண் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து கதிர்காம சுகாதார அலுவலருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, பொது சுகாதார ஆய்வாளர்கள் விடுதிகளை கிருமி நீக்கம் செய்து, பாதிக்கப்பட்ட 5 பேரை மதியம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையில் மூன்று நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.