சேப்பாக்கத்தில் போட்டி.. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1 லட்சம்- ஏமாறும் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் வருகிற 28-ந் தேதி மோதுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்து விற்று தீர்ந்ததாக தகவல் வெளியானது.
இதனால் டிக்கெட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் வேதனையடைந்தனர். மும்பை- சென்னை அணிகளுக்கான ஆட்டத்திற்கும் இதேபோல் தான் உடனே டிக்கெட்டுகள் விற்றுத் விற்றுத் தீர்ந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சேப்பாக்கத்தில் போட்டி நடைபெற்றால் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் வாங்குவது கடினமாக உள்ளதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். நிர்வாகம் கொடுக்கும் இணையதளத்தின் உள்ளே சென்றாலே 3 லட்சம் பேர் காத்திருப்பதாக மெசெஜ் வருகிறது. காத்திருந்தால் கூட டிக்கெட் பெற இயலவில்லை எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.