CINEMAFEATUREDLatestNews

புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு – நீலம் புரொடக்ஷன்ஸ்-இன் சூப்பர் அறிவிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பா. ரஞ்சித். இவர் திரைப்படங்களை இயக்குவது மட்டுமின்றி அவற்றை தயாரிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதற்காக பா. ரஞ்சித் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இதுவரை ஜே பேபி, புளூ ஸ்டார், பாட்டில் ராதா, பொம்மை நாயகி என பல திரைப்படங்களை பா. ரஞ்சித் தயாரித்துள்ளார். இந்த நிலையில், நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க நடிக்க நடிகர், நடிகைகள் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 25 முதல் 50 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் 5 முதல் 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் புதிய படத்தில் நடிக்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போர் மாநிறமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிப்பதற்கான தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர் விண்ணப்பத்துடன் புகைப்படங்கள் மற்றும் 1 நிமிட சுய விளக்க வீடியோவை அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது.