நெல்லியடி பொலிஸ் நிலையத்தின் ஒழுங்கமைப்பில் Clean Sri Lanka செயற்திட்டம் நாளை நெல்லியடியில்
தூய்மையான தேசத்தை உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் Clean Sri Lanka செயற்திட்டமானது பல இடங்களில் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. சூழலின் சுத்தம் கருதி இத்திட்டத்தினை பலரும் கையாண்டு வருகின்றார்கள் அந்த வகையில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தினரால் இந்த Clean Sri Lanka திட்டமானது நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை (16.03.2025) மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த திட்டத்தில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினர் மற்றும் நெல்லியடி வர்த்தக சங்கத்தினரும் கைகோர்த்துள்ளனர். இந்த செயற்திட்டத்தின் மூலம் நெல்லியடி நகரத்தின் சூழல் தூய்மையாக்கப்படுவதுடன் சூழல் மாசடைவு, நோய்த்தொற்று என்பனவற்றை தடுக்க முடியும்.
இந்த திட்டத்தில் பொதுமக்களும் தங்களுடன் கைகோர்த்து சூழலின் தூய்மை பேணுவதற்கு உதவுமாறு நெல்லியடி பொலிஸ் நிலையத்தினர் அழைப்பு விடுத்துள்ளார்கள். நெல்லியடி பொலிஸ் நிலையத்தினரின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்படுவதுடன் அவர்களுடன் கைகோர்த்து தூய்மையாக்கள் பணியில் ஈடுபட பலரும் தமது விருப்பத்தினை தெரிவித்துக்கொண்டுள்ளார்கள்.