கூலி படத்தின் Exclusive Stills- ஐ வெளியிட்ட படக்குழு
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஸ்ருதிஹாசன் அவரது வாழ்த்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இவர் கூலி திரைப்படக்குழுவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் அமீர் கானுக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் பேசும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்து தெரிவித்து கூலி படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் நடிகர்களான ரஜினிகாந்த், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர் இடம் பெற்றுள்ளனர்.
கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.
Team #Coolie wishes the captain of the ship, @Dir_Lokesh a super happy birthday! Here are exclusive stills from the sets of #Coolie 😍@rajinikanth @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit… pic.twitter.com/yd0t1rSFeH
— Sun Pictures (@sunpictures) March 14, 2025
Pingback: MyBlog