FEATUREDLatestNewsTOP STORIES

புதிய இடத்தில் திறந்து வைக்க குடியகல்வு குடிவரவு திணைக்கள அலுவலம்!!

குடியகல்வு குடிவரவு திணைக்க வவுனியா அலுவலகமானது வவுனியா(Department of Immigration Vavuniya Office – Vavuniya) மன்னார் வீதியில்(Mannar road) புதிய அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது இன்று (16/08/2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்,

குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிடிய மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்திர தலைமையில் குறித்த கட்டிடமானது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு,

இதுவரை காலமும் வவுனியா வெளிவட்ட வீதியில் இயங்கி வந்த இந்த அலுவலகத்தை இடவசதி மற்றும் பொதுமக்களின் வசதி கருதி குறித்த இடத்தில் தொடர்ச்சியாக நடத்த முடியாத காரணத்தினால் மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான மன்னார் வீதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும்,

சுமார் 24 மில்லியன் ரூபா செலவில் புணரமைப்பு செய்யப்பட்ட குறித்த கட்டிடமானது குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் புதிய அலுவலகமாக இன்று(16/08/2024() முதல் செயற்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *