பாடசாலைகளில் கட்டாய சோதனைகள்….. காவல்துறை மா அதிபர் அதிரடி உத்தரவு!!
பாடசாலைகளில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்தால் மாத்திரமே சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை மா அதிபர் அறிவித்துள்ளார்.
உறுதிப்படுத்திய தகவல்களைப் பெறாமல் பாடசாலைகளில் சோதனைகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சில பிரதேசங்களில் பாடசாலை மாணவர்களால் போதைப்பொருள்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவலையடுத்து
அண்மைய வாரங்களாக பாடசாலைகளை அண்டிய பகுதிகளிலும்,
சில சந்தர்ப்பங்களில் பாடசாலைகளுக்குள்ளும் சோதனைகளை காவல்துறையினர் மேற்கொண்டனர்.
பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போன்ற போதைப்பொருட்களைப் பரப்புவதற்கு ஒரு குழு ஒழுங்கமைக்கப்பட்ட பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.com/bn/register?ref=UM6SMJM3