4 மணி நேரத்தில்195 நாடுகளின் தேசிய கீதங்களை அந்தந்த நாட்டு மொழிகளிலேயே பாடி உலகசாதனை படைத்த தமிழ் சிறுமி!!
இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, 4 மணி நேரத்தில் 195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி உலக சாதனை படைத்துள்ளார்.
திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹேமந்த்–மோகனப்பிரியா தம்பதியரின் மூத்த மகளான சுபிக்ஷா என்பவரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
13 வயது சிறுமி,
திருவொற்றியூர் அரசு நூலகத்தில் நேற்று முன்தினம்(11/09/2022) காலை நடந்த நிகழ்வில்
4 மணி நேரத்தில் 195 நாடுகளின் தேசிய கீதங்களை இடை விடாது பாடி அசத்தி உலகச் சாதனை புரிந்தார்
எட்டாம் வகுப்பில் படித்து வரும் சுபிக்ஷாவுக்கு சிறு பிராயம் முதலே அனைத்து நாடுகளின் மொழிகளையும்
கற்கவேண்டும் என்ற தணியாத ஆர்வம் இருந்து வந்தது.
இந்நிலையில்,
பெற்றோரின் ஒத்துழைப்புடன் வலையொலி (YouTube) மூலம் உலக நாடுகளின் தேசிய கீதங்களைக் கேட்டு
அந்தந்த நாட்டு ராகம் மற்றும் மொழிகளிலும் உச்சரிப்பு மாறாமல் பாடி அசத்தி உள்ளார்.
ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தியா, ரஷ்யா, உக்ரைன், ஜப்பான், ஆஸ்திரேலியா, அங்கோலா, கனடா, வங்காளதேசம், குவைத், மலேசியா, ஜிம்பாப்வே உட்பட்ட 195 நாடுகளின் தேசிய கீதங்களை அந்தந்த நாட்டு மொழிகளிலேயே பாடி அசத்தினார்.
சாதனை படைத்த சிறுமியை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.