எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்தவர்கள் தலைக்கவசத்தால் தாக்கிய….. முறைகேட்டை தட்டிக்கேட்ட யாழ் இளைஞன் திடீர் மரணம்!!
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கைகலப்பில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடுவில் செபமாலை கோவிலடியைச் சேர்ந்த செல்வரத்தினம் பிரசாந் (வயது-23) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த ஞாயிற்றுக்கிழமை(19/06/2022) இரவு உயிரிழந்த இளைஞனும் ,
அவரது நண்பரும் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
அதன்போது,
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து இருவரும்
அவற்றை தமது கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த போது ,
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்தவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
முரண்பாடு முற்றிய நிலையில் இரு இளைஞர்கள் மீதும் தலைக்கவசம் உள்ளிட்டவற்றால் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில் இருவரும் காயமடைந்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை தாக்குதலாளிகளிடம் இருந்து காப்பாற்றி அங்கிருந்து அனுப்பி வைத்திருந்தனர்.
மறுநாள் திங்கட்கிழமை(20/06/2022) தாக்குதலுக்கு இலக்கான இளைஞர்களில் ஒருவர் நெஞ்சு வலி என
யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
வைத்தியசாலையில் அவரை விடுதியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில்,
புதன்கிழமை(22/06/2022) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.