சட்டத்தை கையிலெடுத்த சதீஷ்….. ரசிகர்கள் கொண்டாட்டத்தில்!!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து, தற்போது நாயகனாக நடித்து வரும் சதீஷ், சட்டத்தை தன் கையில் எடுத்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் சதீஷ்.
இவர் ‘நாய் சேகர்’ என்ற படம் மூலம் கதையின் நாயகனாக களமிறங்கினார்.
இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் சதீஷ் நடிப்பில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படமும் உருவாகி வருகிறது.
தற்போது ‘சட்டம் என் கையில்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக சதீஷ் நடித்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சதீஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
சதீஷ் அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக.
இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.