வீடுடைத்து கொள்ளை மற்றும் வழிப்பறி….. 23 வயது அல்வாய் பகுதி இளைஞர் கைது – அவரிடமிருந்து ஹெரோயினும் கைப்பற்றப்பட்ட்து!!

வடமராட்சி பகுதியில் வீடுடைத்து திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

பருத்தித்துறை காவல்துறை புலனாய்வாளர்கள் முன்னெடுத்த விசாரணைகளின் போது,

நேற்று(14/10/2022) அல்வாய் பகுதியில் வைத்து 23 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 3 பவுண் தாலி, 2 பவுண் சங்கிலி, உந்துருளி மற்றும் ஐ போன் ஒன்றும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபரின் உடமையிலிருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பட்டது என்று காவல்துறையினர் கூறினர்.

இந்தக் கும்பலைச் சேர்ந்த மற்றயவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருகின்றனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *