வருட இறுதிக்குள் 300 ரூபா வரை அதிகரிக்கலாம்….. ரணில் விக்ரமசிங்க!!
வருட இறுதிக்குள் 300 ரூபா வரை டொலரின் பெறுமதி அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
விசேட காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அக்காணொளியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
டொலர் பற்றாக்குறை இன்னும் நீங்கவில்லை.
ரூபாவின் பெறுமதி கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று ஒரு டொலர் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இத்தொகை 275 ரூபாய் வரை உயரக்கூடும்.
அத்தோடு நிறுத்தவில்லை என்றால் வருட இறுதிக்குள், டொலரின் பெறுமதி 300 ரூபா வரை அதிகரிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.