உலகும் முதலாவது மின்சார தானியங்கி கப்பலை அறிமுகஞ்செய்தது “யாரா இன்டர்நேஷனல்” நிறுவனம்!!

உலகின் முதல் மின்சார தானியங்கி சரக்கு கப்பலை நோர்வேயின் பிரபல உரத் தயாரிப்பு நிறுவனமான யாரா இன்டர்நேஷனல் அறிமுகம் செய்துள்ளது.

80 மீட்டர் நீளமுள்ள இந்த மின்சார தானியங்கி சரக்கு கப்பலுக்கு “யாரா பிர்க்லேண்ட்” (Yara Birkeland)  என்று பெயரிடப்பட்டுள்ளது.

மின்சார மற்றும் தானியங்கி தொழில்நுட்பம் மூலம் இயங்கும் கப்பலை உலகிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்வதன்மூலம் மிகப்பெரிய மாற்றத்தின் முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வெய்ன் தோர் ஹோல்ஸ்தர் தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் முழுமையாக மின்சாரத்தில் இயங்குவது மட்டுமல்லாமல் கண்டெய்னர்களை ஏற்றுவது இறக்குவது, ரிசார்ஜ் செய்வது, சரியான வழித்தடத்தில் பாதுகாப்பாக கப்பலை செலுத்துவது என அனைத்தையும் தானியங்கி தொழில்நுட்பம் மூலம் செயல்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *