தங்க பிரியர்களுக்காக சோகமான செய்தி!!
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்ததன் காரணமாக இலங்கையிலும் விலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தங்கநகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 24 கரட் தங்கத்தின் விலை 10,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு பிரதான தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன்னர் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 106,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை கிட்டத்தட்ட 118,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக செட்டியார் தெரு பிரதான தங்க வியாபாரிகள் கூறியுள்ளனர்.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக 8 கிராம் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1863 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இந்த விலையானது 2000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் என சர்வதேச ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன.