பெண்களின் பாதுகாப்பிற்கு பெரும் பாதிப்பு நாட்டில்….. கலாநிதி கலா பீரிஸ், கலாநிதி ஹரிணி அமரசூரிய, கலாநிதி விசாகா சூரியபண்டார மறறும் அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் கருத்து!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக நாட்டின் பெண்களின் பாதுகாப்புக்கு பெரும் பங்கம் ஏற்படும் அபாயம் நிலை உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து வருவதால்,

வீதி விளக்குகளை அணைப்பது நிலைமையை மோசமாக்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

நாட்டில் பகலில் மின்சாரம் தடைப்படாத போதே பெண்கள் பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.

இரவில் வீதி விளக்குகளை அணைப்பது பெரும் பிரச்சனையாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை,

இந்த முடிவு சமூகத்தில் பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு பெண்களை மிகவும் பாதுகாப்பற்றவர்களாக மாற்றும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி விசாகா சூரியபண்டார தெரிவித்தார்.

மேலும்,

இது உணர்வுபூர்வமாக பார்க்கப்பட வேண்டிய விடயம் எனவும்,

இவ்வாறான நெருக்கடியான நிலையில் அரசாங்கத்தின் தீர்மானங்களினால் பாதிக்கப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டியது சமூகத்தின் பொறுப்பாகும் என பெண்கள் ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி கலா பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இந்த நடவடிக்கை பெண்களின் பாதுமிகவும் பாதுகாப்பற்ற முறையில் பாதிக்கின்றது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சூழ்நிலையில்,

வீதி விளக்குகளை அணைப்பது குற்றமாக பார்க்க முடியாதென போதிலும் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலைக்கு ஆளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் டொலர் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக,

இரவு வேளையில் வீதி விளக்குகளை அணைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *