இணையம் மூலம் பண மோசடிகள்….. பெருமளவில் பலியாகி வரும் பெண்கள்!!
இந்த வருடம் இணையம் மூலம் நடத்தப்பட்ட பண மோசடிகள் தொடர்பாக 150 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணனி குற்றப்பிரிவின் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் திருமதி தர்ஷிகா குமாரி தெரிவித்தார்.
தமது அடையாளத்தை வெளிப்படுத்தாத பல்வேறு நபர்களின் மோசடி நடவடிக்கைகளில் சிக்கி பணம் மற்றும்
உடமைகளை இழந்த பல சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணையத்தில் இத்தகைய மோசடிகளுக்கு பெருமளவில் பெண்கள் பலியாகி வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திருமதி தர்ஷிகா குமாரி குறிப்பிட்டுள்ளார்.