காதலனை விஷம் வைத்து கொன்றதாக ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்ட பெண்….. வழக்கில் தற்போது திடீர் திருப்பம்!!
கேரளாவில் வசதியாக வரன் அமைந்ததால் உயிருக்கு உயிராக காதலித்த காதலனை காதலி விஷம் வைத்து கொலை செய்துள்ளதாக கூறப்பட்ட வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கேரளா எல்லையில் அமைந்துள்ள பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் ஷாரோன் ராஜ்(வயது 23).
இவர் கல்லூரி படித்து வந்த நிலையில்,
அதே கல்லூரில் படித்த கிரீஷ்மா(வயது 23) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
ஷாரோன் ராஜுக்கு கிரீஷ்மா வகுப்பு குறிப்புகள்(Notes) எழுதிக் கொடுப்பது போன்ற உதவிகளையும் செய்து வந்திருக்கிறார்.
இந்த பழக்கமே நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
மேலும்,
தனது காதலனுடன் பல டிக்டாக் காணொளிகளை வெளியிட்டு இரண்டு பேரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். இவர் கல்லூரி படிப்பினை முடித்து வேலைக்கு சென்ற நிலையில் காதலன் மட்டும் படிப்பினை மேற்கொண்டு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில்,
பணக்கார வரண் ஒன்று வந்ததாலும், ஜாதகத்தில் முதல் கணவர் இறந்துவிடுவார் என்று இருந்ததாலும்,
தனது காதலனை கொலை செய்ய திட்டமிட்டு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொடுத்துள்ளார்.
பின்பு பொலிசிலிருந்து தப்பிப்பது எப்படி? என்று கூகுளில் தேடியதாகவும் தெரியவந்தது.
இந்நிலையில்,
குறித்த கொலையை செய்யவில்லை எனவும் காவல்துறையினர் வேண்டுமென்றே இந்த பழியை தன்மீது போடுவதாகவும்,
பொலிசார் போலியான ஆவணங்களை உருவாக்கியுள்ளதாகவும் இளம்பெண் கூறியுள்ளாராம்.
பொலிசார் கூறுகையில்,
முழுநீள வீடியோ தங்களிடத்தில் இருப்பதாகவும்,
இந்த வழக்கில் அறிவியல் பூர்வமாக ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றனர்.
காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட இளம்பெண்,
நீதிமன்றத்தில் தான் இந்த கொலையை செய்யவில்லை என வாக்குமூலம் அளித்திருப்பது இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.