இந்த வார இறுதி நாட்களில் மின்துண்டிப்பு விபரங்கள்!!

இந்த வார இறுதி நாட்களில் மின்துண்டிப்பை மேற்கொள்ளும் விதம் தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

இதற்கமைய,

எதிர்வரும் சனிக்கிழமை A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு மாலை 3 மணிமுதல் இரவு 9 மணிவரை சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படும்.

P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு மாலை 3 மணிமுதல் இரவு 10 மணிவரை 2 மணித்தியாலங்களும் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை,

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை 1 மணித்தியாலம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலம் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *