விற்பனையில் புதிய மைல்கல் எட்டிய பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

பஜாஜ் நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் மாடல் விற்பனையில் புதிய மைலக்ல் எட்டியுள்ளது.

பஜாஜ் நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இது பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இந்தியாவில் செட்டாக் எலெக்ட்ரிக் மாடல் துவக்க விலை ரூ. 1.15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

தற்சமயம், செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனையில் ஆயிரம் யூனிட்களை கடந்து இருப்பதாக பஜாஜ் தெரிவித்து இருக்கிறது. தற்சமயம் பஜாஜ் செட்டாக் மாடல் பூனே மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. துவக்கத்தில் இந்த மாடல் அதிக வரவேற்பை பெற்று வந்தது.

பின் கொரோனா ஊரடங்கு சமயத்தில் இதன் விற்பனை சரிவடைந்தது. தற்சமயம் ஊரடங்கிற்கு பின் விற்பனை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு வேரியண்ட்களிலும் 3kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 4KW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வரை செல்லும்.
மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் ஆகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *