“விக்ரம்” படம் ‘புர்ஜ் கலீஃபா’ கட்டிடத்தில் உள்ள மிகப்பெரிய திரையில் வெளியீடு!!

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்‘.

கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில்,

விக்ரம் படத்திற்காக கமல் எடுத்த அதிரடி முடிவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

‘விக்ரம்’ படத்தின் டிரைலரை உலகின் உயரமான கட்டிடமான, துபாயில் உள்ள “புர்ஜ் கலீஃபா” கட்டிடத்தில் உள்ள மிகப்பெரிய திரையில் இன்று இரவு 8.10 மணிக்கு திரையிடப் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை அதிகாரப்பூர்வமாகத் தனது சமூக வலைதளப்பக்கத்தில் படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *