வாகனம் வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் வாகனங்கள் வைத்திருப்போருக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதாவது, வர்த்தகர்கள் சிலர் வாகன உரிமையாளர்களை ஏமாற்றி பல்வேறு தரக்குறைவான பொருட்களை விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல இதனை தெரிவித்துள்ளார்.

இந்த எச்சரிக்கை குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, எமது நாட்டை பொறுத்த வரையில் அதிகமானோர் கார் அல்லது மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகள் (engine oil) அல்லது கிரீஸ் வகைகள் குறித்து நுகர்வோருக்கு தெளிவற்ற நிலை காணப்படுகின்றது.

இது தொடர்பான அரச அறிக்கையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

“தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தும் மசகு எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுகின்றது.

மேலும், கிரீஸ் கலந்த மாவு உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. இவை குறித்து நுகர்வோருக்கு விழிப்புணர்வு இல்லை. இதுபோன்ற பல பிரச்சினைகளை நுகர்வோர் உணர்ந்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *