வடமரட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை “கோமராசி மீன்“!!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றுமாலை கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையில் பாரிய கோமராசி மீன் பிடிபட்டுள்ளது.

சுமார் 8 அடி நீளம் கொண்ட குறித்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டியிழுத்தனர். கோமராசி அல்லது புள்ளிச் சுறா என அழைக்கப்படும் குறித்த மீனை வலையில் இருந்து அகற்றி மீனவர்களால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.

வலைகளுக்கு நடுவே அதிகளவான மீன்கள் வந்த போதிலும் கோமராசி மீனின் வருகையால் மீன்கள் எதுவும் பிடிபடவில்லை.

சில நாட்களுக்கு முன்பு மேலும் ஒரு கோமராசி மீன் குறித்த சம்மாட்டியின் வலையில் அகப்பட்டதோடு நேற்று இரண்டாவது முறையாகவும் பிடிபட்டுள்ளது. ஆழ்கடலில் வசிக்கும் இம் மீன்கள் சில நாட்களாக கரைக்கு வந்து போவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *