யாழ் பல்கலை மாணவன் மீது பல்கலை வளாகத்தினுள் தாக்குதல்!!
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழ முதலாம் ஆண்டு முகாமைத்துவ பீட மாணவன் மீது 4 ஆவது ஆண்டு மாணவர்கள் சிலர் நேற்று (22/11/2022) தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக பல்கலைக்கழக ஒழுக்காற்று விசாரணைப்பிரிவில் தாக்குதலுக்குள்ளான மாணவனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒழுக்காற்று விசாரணைப்பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.