படிப்படியாக ரஷ்யா படைகளை அடித்து விரட்டும் உக்ரைன் படைகள்….. உக்ரைன் ராணுவத்தளபதி வெளியிடட புகைப்படங்கள் மற்றும் செய்தி!!
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 60 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மக்காரிவ் என்ற நகரை ஆக்கிரமித்திருந்த ரஷ்ய படையினரை அங்கிருந்து விரட்டியடித்துவிட்டதாக உக்ரைன் படைத்தளபதி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றுவதற்கு ரஷ்ய படைகள் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக தலைநகர் கீவை அண்மித்த பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் அவை ஈடுபட்டுள்ளன.
இவ்வாறு ரஷ்ய படை ஆக்கிரமித்திருந்த மக்காரிவ் என்ற பகுதியிலிருந்தே அந்தப்படையை ஓட ஓட விரட்டியடித்ததாக உக்ரைன் படைத்தளபதி தெரிவித்துள்ளார்.
எங்கள் வீரர்களின் வீரச் செயல்களுக்கு நன்றி, உக்ரைன் கொடி மக்காரிவ் நகரத்தின் மீது உயர்த்தப்பட்டது.
எதிரிகள் மக்காரிவ் நகரத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர் என்று தனது முகநூல் பக்கத்தில் உக்ரைன் ஆயுதப்படைகளின் தளபதி அறிவித்துள்ளார்.