23 வயது யாழ் இளைஞனின் முன்மாதிரியான செயல்….. குவியும் பாராட்டுக்கள்!!

யாழ்ப்பாணத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தாலிக் கொடி உள்ளிட்ட நகைப்பையை தவற விட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இளைஞர் ஒருவர்.

இச்சம்பவம் யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 9ஆம் திகதி வியாழன் அன்று அரியாலையில் இருந்து பேருந்தில் ஏறும் போது கைப்பை ஒன்றை தவற விட்டுள்ளனர்.

அந்தப் பையில் தாலி கொடி உள்ளிட்ட பல பொருட்கள் இருந்துள்ளன. குறித்த பணப்பையை கண்டெடுத்த இளைஞன் ஒருவர் உரியவர்களிடம் கொடுத்துள்ளமை பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் – அரியாலையை சேர்ந்த தியானேஸ் மதுசன் (வயது – 22) என்ற இளைஞனே இவ்வாறு உரியவர்களிடம் ஒப்படைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

பேருந்து வந்துவிட்டது என்ற பரபரப்பில் அவசரமாக ஏறும்போது, அரியாலை பஸ் தரிப்பிடத்தில் கைப்பை தவறி கீழே விழுந்ததை அதன் உரிமையாளர் கவனிக்கத் தவறிவிட்டார்.

ஆனால் அந்தவழியாகச் சென்ற மதுசனின் கண்களில் அந்தக் கைப்பை அகப்பட்டுள்ளது. எடுத்துத் திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே தாலிக்கொடி உள்ளிட்ட நகைகள் இருந்தமையே இதற்கு காரணமாகும்.

பணப்பையிலிருந்து உரிமையாளரின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து, விடயத்தைக் கூறியதோடு, கைப்பைக்கு உரியவரின் அறிவுறுத்தலுக்கமைய யாழ்ப்பாண உறவினரிடம் நேரில் சென்று ஒப்படைத்துமுள்ளார்.

சமகாலத்தில் தங்கத்தின் விலை மிகவும் உயர்ந்த மட்டத்தில் உள்ளது. பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கண்டெடுத்த போதும், அதனை உரியவர்களிடம் ஒப்படைத்த அவரின் நேர்மையான செயல் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *