பாடசாலையில் Perfume பாவித்த மாணவிகளுக்கு நடந்த சோகம்!!

மதவாச்சி யக்கவேவ கல்லூரியில் 07 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 05 மாணவிகள்

திடீர் சுகவீனம் காரணமாக நேற்று முன்தினம்(18/11/2022) மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

5 மாணவிகளும் காய்ச்சல், வாந்தி, தலைவலி, மற்றும் கடும் சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகுப்பில் கற்கும் மாணவி ஒருவர் கொண்டு வந்த நறுமண போத்தலை பூசியதால் மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மதவாச்சி காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *