உரும்பிராய் பகுதியில் இயங்கும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் மாயம்!!
கோப்பாய் காவல்துறை பிரிவிற்குற்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கும் சிறுவர் இல்லத்தை சேர்ந்த மூன்று சிறுமிகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர் இல்லத்தை சேர்ந்த 14, 15 மற்றும்
16 வயது சிறுமிகளையே காணவில்லை என்று கூறப்படுகின்றது.
அவர்களில் ஒருவர் முல்லைத்தீவை சேர்ந்தவர் என்றும் ஒருவர் உரும்பிராயை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றனர்.