இதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய கசப்பான உண்மை….. மின்வெட்டு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர்!!
மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால்,
உற்பத்திச் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவி்க்கையில்,
நமது மின்சார உற்பத்தியில் சுமார் 40 சதவீதம் நீர் மின்சாரம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்குச் செல்வதில் எங்களுக்கு ஒரு பெரிய இலக்கு உள்ளது.
அவற்றில் சிலவற்றை நாங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளோம்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு நாம் கட்டாயம் செல்ல வேண்டும்.
அந்த இலக்கை அடையும் வரை தடையின்றி மின்சார விநியோகத்தை தொடர்வதில் இலங்கை மின்சாரசபை பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது.
அவர்களது பிரச்சினைக்கு சாத்தியமான மாற்று எதுவும் இல்லை.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு இடையில் தேவையற்ற மோதல் உருவாக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வெளிப்படையானது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தனது பொறுப்புகளை சரியாக உணர்ந்திருக்கிறதா என்பது ஒரு கேள்வி. குறிப்பாக தேர்தல் வரும்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது அதிக வரிச்சுமையை அரசு சுமத்தாது.
வேறு எந்த மாற்றுவழியும் இல்லாததால் இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய கசப்பான உண்மை.” என குறிப்பிட்டுள்ளார்.